Posts

Showing posts from October 23, 2011

பிசிராந்தையார்

பிசிராந்தையார் தமதூராகிய பிசிரில் இருக்கையில் உறையூரிலிருந்து அரசுபுரிந்த கோப்பெருஞ் சோழனுடைய குணநலங்களைக் கேள்வியுற்று அவனைக் காண்டல் வேட்கை மிக்கிருந்தார். கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையார் நலங்களைக் கேள்வியுற்றுப் பெரு நட்பினைத் தன்னுள்ளத்தே வளர்க்கலுற்றான். இருவருடைய நட்புணர்ச்சிகள் தாமே மிக்கு ஒருவரொருவர் தம் பெயரைக் கூறுமிடத்து, தத்தம் நண்பர் பெயரை இணைத்துக் கூறிக்கொள்ளும் அளவில் சிறந்து நின்றன. கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கப் புக்கபோது சான்றோர் பலர் அவனுடன் வடக்கிருப்பாராயினர். அக்காலை அவன், பிசிராந்தையாரைக் காண விழைந்தான். ஒத்த உணர்ச்சியினராதலால் பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கப் புக்க தறியாது அனைக் காண்டல் வேண்டிப் பாண்டியநாட்டை விட்டுப் புறப்பட்டு உறையூர் வந்தார். அவர் வந்து சேர்தற்குள் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்விட்டானாக, அவற்கு நடுகல்லும் நாட்டப்பட்டுவிட்டது. பிசிராந்தையார் மனஞ் சோர்ந்து வருந்தினார். சிறிது தெளிந்ததும் அருகிருந்த சான்றோருடன் கோப்பெருஞ்சோழன் குணநலங்களைப் பேசி அளவளாவிக் கொண்டிருக்கையில் சிலர், “சான்றீர்! யாங்கள் உங்களை