Posts

Showing posts from 2011

ஸ்ரீ அன்னை-அரபிந்தர்

Image
அருள் பார்வைக்கு புதுச்சேரியின் ஸ்ரீஅன்னை ’கடவுள் நீங்கள் விரும்புவதையெல்லாம் உங்களுக்குக் கொடுத்து விடுவதில்லை. எதை அடைய உங்களுக்குத் தகுதி இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார்’ இப்பொன் வாசகத்திற்குச் சொந்தக்காரர் பிளாஞ்சி ராக்சேல் மிரா. ஆனால் அப்படிச் சொன்னால் அவரை யாருக்கும் தெரியாது. ’மதர்’ என்றாலும் ’ஸ்ரீ அன்னை’ என்றாலும் தான் தெரியும். கலைகளுக்கும் செழுமைக்கும் சொந்தமான நாகரிக நாடான பிரான்ஸில் பிறந்த மிரா, இளம் வயதிலேயே ஆன்மீக ஆற்றல்கள் பெற்றவராக விளங்கினார். இந்தியத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட அன்னை. ஸ்ரீ அரவிந்தரை ஞானகுருவாகக் கனவில் கண்டார், பின் புதுச்சேரியை நாடி வந்து அவரையே முழுமையாகச் சரணடைந்தார். ஸ்ரீ அன்னை ஆனார். 1878 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி பாரிசில் மிரா பிறந்தார். இளம் வயதிலேயே அறிவாற்றல் மிக்கவராகவும், எளியோருக்கு இரங்கும் குணம் கொண்டவராகவும் விளங்கினார். ஆன்மீக நாட்டம் கொண்டிருந்த அவருக்கு தினம்தோறும் தியானத்தில் ஆழ்வதும், இறை ஒளியை தரிசிப்பதும் வழக்கமாக இருந்தது. அவருக்கு அடிக்கடி ஒரு கனவு வரும். அந்தக் கனவில் மெள்ள மெள்ள தன் உடலை விட்டு வெள

பிசிராந்தையார்

பிசிராந்தையார் தமதூராகிய பிசிரில் இருக்கையில் உறையூரிலிருந்து அரசுபுரிந்த கோப்பெருஞ் சோழனுடைய குணநலங்களைக் கேள்வியுற்று அவனைக் காண்டல் வேட்கை மிக்கிருந்தார். கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையார் நலங்களைக் கேள்வியுற்றுப் பெரு நட்பினைத் தன்னுள்ளத்தே வளர்க்கலுற்றான். இருவருடைய நட்புணர்ச்சிகள் தாமே மிக்கு ஒருவரொருவர் தம் பெயரைக் கூறுமிடத்து, தத்தம் நண்பர் பெயரை இணைத்துக் கூறிக்கொள்ளும் அளவில் சிறந்து நின்றன. கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கப் புக்கபோது சான்றோர் பலர் அவனுடன் வடக்கிருப்பாராயினர். அக்காலை அவன், பிசிராந்தையாரைக் காண விழைந்தான். ஒத்த உணர்ச்சியினராதலால் பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கப் புக்க தறியாது அனைக் காண்டல் வேண்டிப் பாண்டியநாட்டை விட்டுப் புறப்பட்டு உறையூர் வந்தார். அவர் வந்து சேர்தற்குள் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்விட்டானாக, அவற்கு நடுகல்லும் நாட்டப்பட்டுவிட்டது. பிசிராந்தையார் மனஞ் சோர்ந்து வருந்தினார். சிறிது தெளிந்ததும் அருகிருந்த சான்றோருடன் கோப்பெருஞ்சோழன் குணநலங்களைப் பேசி அளவளாவிக் கொண்டிருக்கையில் சிலர், “சான்றீர்! யாங்கள் உங்களை

வருடுபொறியின் வகைகள் (Classification of Scanners)

கடந்த சில வருடங்களாக இல்லங்களிலும், அலுவலகங்களிலும் வருடுபொறிகளின் (Scanner) பங்கு மிகவும் அத்தியாவசியமாகி விட்டது. வருடுபொறிகளின் தொழில்நுட்பம் எல்லா இடங்களிலும், பல வழிகளில் உபயோகப்படுத்தப்படுகின்றது. வருடுபொறியின் வகைகள்: (I) தட்டுப்படுகை வருடுபொறி (Flat bed Scanners) (II) தாள்செலுத்தி வருடுபொறி (Sheet bed Scanners) (III) உருளை வருடுபொறி (drum Scanner) (IV) கையடக்க வருடுபொறி (hand held Scanner) (I) தட்டுப்படுகை வருடுபொறி கணிப்பொறி வருடிகள் என்றழைக்கப்படும் தட்டுப் படுகை வருடுபொறிகள் மிகவும் திறன் மிக்க பொதுவாக எல்லோராலும் பயன்படுத்தக்கூடிய ஒரு வருடுபொறியாகும். அந்தத் தட்டப்படுகை வருடுபொறியினுள் நாம் படத்தையோ அல்லது பிற ஆவணங்களையோ உட்செலுத்தி அதே அளவில் நாம் பதிவு செய்து கொள்ளலாம். இதன் இயக்கமுறை கிட்டதட்ட நகல்பொறியின் (Xerox Machine) இயக்கத்தை ஒத்ததாகும் (II) தாள்செலுத்தி வருடுபொறி தாள் செலுத்தி வருடுபொறி, தோற்றத்திலும் அமைப்பிலும் தட்டுப்படுகை வருடுபொறிகளை ஒத்ததாக இருப்பினும், இயங்கும் விதத்தில் மாறுபட்டு இருக்கினறது. இவ்வருடுபொறியினுள் செலுத்தக்கூடிய தாளானாது, தாள் ந

க.தமிழமல்லன்

க.தமிழமல்லன்

உடல் நலத்திற்கு

ஒரு நாளைக்குக் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். * பீட்ரூட்டை சிறு துண்டு களாக நறுக்கி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட பீட் ரூட் பேஸ்ட்டை முகத்தில் பூசி 5 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் சுமார் 10 நிமிடங் கள் கழித்து சோப்பை உபயோகித்தோ அல்லது கடலை மாவை உபயோகித்தோ முகம் கழுவ வேண்டும். * சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து அதனுடன் 4 அல்லது 5 துளி பாலைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகம் மற்றும் உடலில் பூசிக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். * மஞ்சள் தூள், சந்தனப் பொடி மற்றும் ஆலிவ் எண்ணை கலந்த கலவையை உடலில் பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும். * பாலை உபயோகித்து சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். பாலின் ஈரப்பதம் சருமத்தை மிருதுவாக்குகிறது. * அறையில் எப்போதும் ஈரப்பதம் நிலவுமாறும், அறை வெப்ப நிலை அதிகமாக இல் லாதவாறும் பார்த்துக் கொண்டால் சருமம் உலர்ந்து போகாது. * வெந்நீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதில்லை. நீண்ட நேரம