Posts

Showing posts from October 30, 2011

ஸ்ரீ அன்னை-அரபிந்தர்

Image
அருள் பார்வைக்கு புதுச்சேரியின் ஸ்ரீஅன்னை ’கடவுள் நீங்கள் விரும்புவதையெல்லாம் உங்களுக்குக் கொடுத்து விடுவதில்லை. எதை அடைய உங்களுக்குத் தகுதி இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார்’ இப்பொன் வாசகத்திற்குச் சொந்தக்காரர் பிளாஞ்சி ராக்சேல் மிரா. ஆனால் அப்படிச் சொன்னால் அவரை யாருக்கும் தெரியாது. ’மதர்’ என்றாலும் ’ஸ்ரீ அன்னை’ என்றாலும் தான் தெரியும். கலைகளுக்கும் செழுமைக்கும் சொந்தமான நாகரிக நாடான பிரான்ஸில் பிறந்த மிரா, இளம் வயதிலேயே ஆன்மீக ஆற்றல்கள் பெற்றவராக விளங்கினார். இந்தியத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட அன்னை. ஸ்ரீ அரவிந்தரை ஞானகுருவாகக் கனவில் கண்டார், பின் புதுச்சேரியை நாடி வந்து அவரையே முழுமையாகச் சரணடைந்தார். ஸ்ரீ அன்னை ஆனார். 1878 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி பாரிசில் மிரா பிறந்தார். இளம் வயதிலேயே அறிவாற்றல் மிக்கவராகவும், எளியோருக்கு இரங்கும் குணம் கொண்டவராகவும் விளங்கினார். ஆன்மீக நாட்டம் கொண்டிருந்த அவருக்கு தினம்தோறும் தியானத்தில் ஆழ்வதும், இறை ஒளியை தரிசிப்பதும் வழக்கமாக இருந்தது. அவருக்கு அடிக்கடி ஒரு கனவு வரும். அந்தக் கனவில் மெள்ள மெள்ள தன் உடலை விட்டு வெள