Posts

Showing posts from 2013

பனையின் பயன்கள்

பனை. . . பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும். பொது வழக்கில்  மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும். பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்

ஏலக்காய்- மருத்துவக் குறிப்பு

Image
சமையலில் முக்கியமாக இனிப்புப் வகைகள், கேக், போன்றவற்றிற்கு வாசனை, சுவை அளிக்க கூடிய ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்று சிறப்புப் பெயர் - செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ் பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன. ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. * சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அஜீரணம் அகலும். பசி ருசி உண்டாகும். * ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது. * ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சே