Posts

Showing posts from 2007

பாரதி பாரதிதாசன்: மொழி வழித் தேசியம்

ஏ. எழில்வசந்தன் இருபதாம் நூற்றாண்டில் பிறந்த இருபெரும் மகாகவிகள் பாரதியும் பாரதிதாசனும் ஆவர். பாரதி தேச விடுதலைக்கான உரத்தினை தன் கவிதைகளின் வாயிலாக வெளிப்படுத்தி தன்னை தேசியக் கவியாக வெளிப்படுத்திக் கொண்டார். பாரதிதாசனோ எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனத் தன்னை முழுக்க முழுக்க தமிழ் இனக் கவிஞனாக வெளிப்படுத்திக் கொண்டார். இருப்பினும் பாரதியும் தமிழைப் பற்றிப் பாடியுள்ளார், அதேபோலப் பாரதிதாசனும் தேசவிடுதலை வேண்டிப் பாடியுள்ளார். இவ்விருவரையும் ஒருமித்து நோக்குகையில் மொழி என்ற அளவில் இனம் சார்ந்த நிலையில் ஒத்த கருத்துடையவர்களாகவும் தேசியம் சார்ந்த நிலையில் மாறுபட்டக் கருத்துடையவர்களாகவும் இருந்துள்ளனர். ஆனால் மொழி என்பது தேச ஒற்றுமைக்கும் தேசிய விடுதலைக்கும் எவ்விதம் உறுதுணையாக அமையும் என்பதனை இருவரும் வேவ்வேறு நிலைகளில் நின்று தங்களுடைய படைப்புகளில் பதிவு செய்துள்ளனர்.பாரதியும் பாரதிதாசனும் ஒப்புமைகள்பாரதியையும் பாரதிதாசனையும் பிறப்பு முதல் ஆய்வோமானால் பல ஒப்புமைகள் காணக்கிடக்கின்றன. பாரதி தனது ஆசிரியர் பணியைத் தாற்காலிகமாகத் செய்தார். பாரதிதாசனோ தம் வாழ்க்கையைத் தமிழ் ஆசிரியராகவே த

ஆசிரியர் தின வாழ்த்து

மதிப்புமிகு முதல்வர்அவர்களே அன்புமிகு ஆசிரியர்களே இனிய நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். இந்தக் கவிதைகள் ஆசிரியர்களை வாழ்த்திப்பேசி வசியப் படுத்துவதற் கல்ல..... அல்லது இன்று ஆசிரியர் தினம்என்பதால் சடங்கு முறைக்காகத்தொடுக்கப்பட்ட சர்க்கரைச் சரமும்அல்ல......மாறாக, அன்றையகுருகுலம் தொடங்கி இன்றைய கல்விப் புலம் வரை காலம் கடந்து கலங்கரை விளக்காய் ஒளி காட்டும், வழிகாட்டும் ஆசிரிய விழிகளுக்கு எங்களின்அன்புப் பாமாலை இன்பத் தமிழ் மாலை...... வெற்றிக்கு வ(வி)ழிகாட்டிகள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள் சான்றோர்கள் ஆலோசித்தோம் எங்களுக்கு உடன்பாடில்லை மாதா, பிதாவாக இருக்கும்குருவே எங்கள் தெய்வமெனத் தீர்மானம் நிறைவேற்றி உச்ச நீதி மன்றத்திற்கு மனுச் செய்துள்ளோம்..... இந்த ஏணிப்படிகள் எத்துணைப் பேரைஉயர வைத்திருக்கும் அப்பப்பா....அண்ணார்ந்து பார்த்தோம் மெய்ச் சிலிர்ப்பில் மனம் மகிழ்ந்தோம்..... கல்லைப்பட்டைத் தீட்டத் தீட்ட வைரம் விளையுமாம். அதில் என்ன வியப்பு.... எங்கள் ஆசிரியர்கள் கூழாங் கற்களையல்லவா வைர மாக்கியுள்ளார்கள்.... ஏகலைவன் கட்டைவிரலைத் தட்சணையாகக் கொடுத்தானாம் கேள்விப்பட்டோம் புராணக் கதைக

புலம் பெயர்ந்த புதுச்சேரித் தமிழர்கள்

ஏ. எழில்வசந்தன் புதுச்சேரி தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரிலிருந்து 170கல் தொலைவில் உள்ள இடம். புதுச்சேரி மாநிலத்தின் தலைநகரும் ஆகும். ஏறக்குறைய இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாவகாமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் அருகாமையிலுள்ள ஏனாம் நகரும் கேரளத்தின் அருகேஉள்ள மாஹே நகரும் தெலுங்கு, மலையாள மொழிபேசும் மக்களைக் கொண்டு புதுவை மாநிலத்தின் அங்கங்களாக உள்ளன. இவற்றோடு தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகேயுள்ள காரைக்கால் பகுதியும் புதுவையுடன் அங்கம் வகிக்கிறது. இப்படிப் பன்மொழி பேசும் பகுதிகளைத் தன் இணைப்பாகக் கொண்ட புதுவை பிரெஞ்சுக் காலனியத்தின் போழ்து தனது காலனி நாடுகளுக்கு வேலையாட்களை கூலிகளாக அனுப்பி வைத்தது. அப்படி கூலியாட்களாகச் சென்றவர்களில் பலர் அந்தந்த நாடுகளில் தங்கியும் ஒருசிலர் தாயகம் திரும்பியும் தங்களது தொடர்பை வைத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் பிரென்சுக்காரர்களின் காலனி ஆதிக்கத்தில் புதுவையில் இருந்து சென்றவர்கள் ஏராளமானோர் ஆகும். புதுச்சேரியில் பிரான்சு வாழ

'கற்றிலனாயினும் கேட்க'

ஒரு பொருளைப்பற்றிப்பேச வருபவர்கள் நம்மைவிட அதிகம் கற்றவர்களாக இருப்பர். நாம் அதிகம் படிக்காதபொழுது மற்றவர்களின் பேச்சைக்கேட்பதே பல நூல்களைப்படிப்பதற்குச்சம மாகும். 'கற்றிலனாயினும் கேட்க' என்கிறார் திருவள்ளுவர்.நான் கேட்டதோடு அமையாமல் மற்றவர்களும் கேட்கவேண்டும் என்ற விருப்பத்தோடு பதிவுசெய்து பேச்சுகளை ஒலிநாடாக்களில் பாதுகாத்துவருகிறேன்.

திருக்குறள்

சோதனை முயற்சி திருக்குறள் பற்றிய பல ஆய்வுநூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை அறிமுகம் செய்ய இப்பக்கத்தைத் தொடங்கியுள்ளேன். அன்புள்ள எழில்வசந்தன்,புதுச்சேரி