Posts

Showing posts from July 24, 2011

வருடுபொறியின் வகைகள் (Classification of Scanners)

கடந்த சில வருடங்களாக இல்லங்களிலும், அலுவலகங்களிலும் வருடுபொறிகளின் (Scanner) பங்கு மிகவும் அத்தியாவசியமாகி விட்டது. வருடுபொறிகளின் தொழில்நுட்பம் எல்லா இடங்களிலும், பல வழிகளில் உபயோகப்படுத்தப்படுகின்றது. வருடுபொறியின் வகைகள்: (I) தட்டுப்படுகை வருடுபொறி (Flat bed Scanners) (II) தாள்செலுத்தி வருடுபொறி (Sheet bed Scanners) (III) உருளை வருடுபொறி (drum Scanner) (IV) கையடக்க வருடுபொறி (hand held Scanner) (I) தட்டுப்படுகை வருடுபொறி கணிப்பொறி வருடிகள் என்றழைக்கப்படும் தட்டுப் படுகை வருடுபொறிகள் மிகவும் திறன் மிக்க பொதுவாக எல்லோராலும் பயன்படுத்தக்கூடிய ஒரு வருடுபொறியாகும். அந்தத் தட்டப்படுகை வருடுபொறியினுள் நாம் படத்தையோ அல்லது பிற ஆவணங்களையோ உட்செலுத்தி அதே அளவில் நாம் பதிவு செய்து கொள்ளலாம். இதன் இயக்கமுறை கிட்டதட்ட நகல்பொறியின் (Xerox Machine) இயக்கத்தை ஒத்ததாகும் (II) தாள்செலுத்தி வருடுபொறி தாள் செலுத்தி வருடுபொறி, தோற்றத்திலும் அமைப்பிலும் தட்டுப்படுகை வருடுபொறிகளை ஒத்ததாக இருப்பினும், இயங்கும் விதத்தில் மாறுபட்டு இருக்கினறது. இவ்வருடுபொறியினுள் செலுத்தக்கூடிய தாளானாது, தாள் ந