Posts

Showing posts from 2012

நிக்காலோ மானுச்சி- Niccolò Manucci

Image
நிக்காலோ மானுச்சி-  Niccolò Manucci            மெட்ராஸ் நகரில் குடியேறிய ஆங்கிலேயர்களில் சிலர் தமிழ்மொழிமீது பற்று கொண்டு தமிழறிஞர்களாக மாறிய கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், இத்தாலியில் இருந்து இந்த மண்ணிற்கு வந்த ஒரு மனிதர் “சிறந்த சித்த வைத்தியர்“ எனப் பேர் எடுத்த கதையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தப் புகழ்பெற்ற சித்த வைத்தியர் தான் நிக்காலோ மானுச்சி. இத்தாலியின் பிரபல வெனீஸ் நகரில் 1638இல் பிறந்த நிக்காலோ மானுச்சி, தனது14-ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். ஒரு ஆங்கிலேயருக்கு உதவியாளனாக ஆசியா செல்லும் கப்பலில் ஏறினார் மானுச்சி. பல நாடுகளை சுற்றிக் கொண்டு கப்பல் இந்தியா வந்தடைவதற்குள் அவரது முதலாளி பரலோகம் சென்றடைந்துவிட்டார். மானுக்சிக்கு பிழைக்க வழி தெரியவில்லை.      அப்போது இந்தியாவில் ஷாஜஹானின் மகன்கள் தாரா சிக்கோவுக்கும், அவுரங்கசீப்புக்கும் இடையில் அரியணைக்காள அடிதடி அரங்கேறிக் கொண்டிருந்த்து. இரதரப்பும் ஆள் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். இதைப் பயன்படுத்தி ராராவின் படையில் துப்பாக்கி வீரனாக சேர்ந்துகொண்டார் மானுச்சி.         ஆனால், இறுதியில் அவுரங்