Posts

Showing posts from May 9, 2010

ஆர்தர் தாமஸ் காட்டன்

Image
படத்திலிருக்கும் இந்தச் சிலையை … ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா , கோதாவரி மாவட்ட கிராமங்களில் சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும்-நம்மூரில் அண்ணா சிலை இருப்பதைப் போல! ‘ யாரு … என்.டி.ஆர். காருவா … ஓய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டிகாருவா …?’ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடாதீர்கள் … இவர் சர் ஆர்தர் தாமஸ் காட்டன்! அந்த இரண்டு மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்தர் காட்டனுடைய சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ‘ கங்கை கொண்ட பகீரதன் ’ என்று பெயர் சூட்டி , மக்கள் அவரை மனதார பூஜிக்கிறார்கள்! அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடிக்க இவர் செய்தது … அணைகள் கட்டி , விவசாயத்துக்கான நீராதாரத்தைப் பெருக்கிக் கொடுத்ததுதான் ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதியின் குறுக்கே கண்ணாவரம் என்ற இடத்திலும் , கோதாவரியின் குறுக்கே தௌலெஸ்வரம் என்ற இடத்திலும் இவர் கட்டிய அணைகள்தான் , இன்று சுமார் 10 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதியைத் தந்து , பல லட்சம் விவசாயிகளுக்கு வாழ்க்கை கொடுத்து கொண்டுள்ளது. தமிழகத்திலும்கூட … இவருடைய சேவைக் கரங்கள் நீளத்தான் செய்தன. கொள்ளிடம் நதியின் குறுக்கே தஞ்சாவூர்