Posts

Showing posts from September 26, 2010

சிவப்பிரகாசரும் ஏசுமத நிராகரணமும்

சிவப்பிரகாசர்   என்பவர் "கற்பனைக் களஞ்சியம்" என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். சிற்றிலக்கியப்   புலவர். இவர் , " கவி சார்வ பெளமா" , " நன்னெறி சிவப்பிரகாசர்" , " துறைமங்கலம்" சிவப்பிரகாசர் என்று பலவாறாக அழைக்கப்பட்டார். தமிழகத்தில் சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான   சம்பந்தர் ,   அப்பர் , சுந்தரர் ,   மாணிக்கவாசகர்   ஆகிய நால்வருக்கும் "நால்வர் நான்மணி மாலை" என்ற கவிதை நூலை இவர் எழுதினார். வாழ்க்கைச் சுருக்கம் தொண்டை நாட்டின்   காஞ்சிபுரத்தில்   வேளாளர்களின்   ஞானகுருவாக விளங்கியவர் குமாரசாமி தேசிகர். இவருக்கு சிவப்பிரகாசர் , வேலையர் , கருணைப்பிரகாசர் , ஞானாம்பிகை எனும் பெயரில் நான்கு பிள்ளைகள். மக்களின் கல்விப்பருவத்திலேயே , குமாரசாமி தேசிகர் இறையடி சேர்ந்தார். பின்னர் , மூத்தவர் சிவப்பிரகாசர் தம் தம்பியரொடு   திருவண்ணாமலை   சென்று , அங்கு தெற்கு வீதியிலுள்ள திருமடத்தில் எழுந்தருளியிருந்த குருதேவரைக் கண்டு வணங்கி அங்கேயே இருந்துகொண்டு தாம் கற்கவேண்டிய நூல்களைக்கற்று வந்தார். ஆங்கோர்நாள் , திருவண்ணாமலையை

நல்லாற்றூர் துறைமங்கலம் கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் செந்தமிழ் உயராய்வு மைய 17ஆம் ஆண்டுவிழா

Image
மயிலம் பொம்மபுர ஆதீனமும், ஸ்ரீசிவப்பிரகாசர் செந்தமிழ் உயராய்வு மைய அறக்கட்டளையும் மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்  தமிழ், கலை, அறிவிய ல்  கல்லூரியும்   இணைந்து நடத்திய நல்லாற்றூர் துறைமங்கலம் கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் செந்தமிழ் உயராய்வு மைய 17ஆம் ஆண்டுவிழா காலை 9.00 மணிக்குத் தொடங்கிய இவ்விழா நிகழ்வு மாலை 05.00 மணிக்கு பத்தொன்பதாம் பட்டம் குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் சிவஞான பாலய சுவாமிகள் அவர்களின்ஆசியுரையோடு நிறைவுற்றது. கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் காலை 09.00மணியளவில் கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகளின் திருவுருவப்படத்தை கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இலட்சாராமன் அவர்களின் வழிகாட்டுதலுடன் பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் இணைந்து ஊர்வலமாகக் கொண்டுவந்தனர். கல்லூரி மாணவிகள் இறைவணக்கம் பாட விழா இனிதே துவங்கியது. ஸ்ரீசிவப்பிரகார சுவாமிகளின் திருவுருவப் படத்தை கல்லூரிச் செயலர் குமாரசிவ.இராசேந்திரன், ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் மேனிலைப்பள்ளி செயலர் குமாரசிவ விசுவநாதன் அவர்கள் திறந்து வைக்க, சிறப்பு விருந்தினர்களும், கல்லூரிப் பேராசிரி