நல்லாற்றூர் துறைமங்கலம் கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் செந்தமிழ் உயராய்வு மைய 17ஆம் ஆண்டுவிழா

மயிலம் பொம்மபுர ஆதீனமும்,
ஸ்ரீசிவப்பிரகாசர் செந்தமிழ் உயராய்வு மைய அறக்கட்டளையும்
மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் 
தமிழ், கலை, அறிவியல் கல்லூரியும் 
இணைந்து நடத்திய
நல்லாற்றூர் துறைமங்கலம்
கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள்
செந்தமிழ் உயராய்வு மைய 17ஆம் ஆண்டுவிழா

காலை 9.00 மணிக்குத் தொடங்கிய இவ்விழா நிகழ்வு மாலை 05.00 மணிக்கு பத்தொன்பதாம் பட்டம் குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் சிவஞான பாலய சுவாமிகள் அவர்களின்ஆசியுரையோடு நிறைவுற்றது.
கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள்

காலை 09.00மணியளவில் கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகளின் திருவுருவப்படத்தை கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இலட்சாராமன் அவர்களின் வழிகாட்டுதலுடன் பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் இணைந்து ஊர்வலமாகக் கொண்டுவந்தனர்.
கல்லூரி மாணவிகள் இறைவணக்கம் பாட விழா இனிதே துவங்கியது.

ஸ்ரீசிவப்பிரகார சுவாமிகளின் திருவுருவப் படத்தை கல்லூரிச் செயலர் குமாரசிவ.இராசேந்திரன், ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் மேனிலைப்பள்ளி செயலர் குமாரசிவ விசுவநாதன் அவர்கள் திறந்து வைக்க, சிறப்பு விருந்தினர்களும், கல்லூரிப் பேராசிரியப் பெருமக்களும் குத்துவிளக்கேற்றிவைக்க விழா இனிதே தொடங்கியது.
கல்லூரிச் செயலர் குமாரசிவ.இராசேந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றல்
வேளாண் விஞ்ஞானி முனைவர் துரை.கணபதி அவர்கள் வரவேற்புரை வழங்க, வீரசைவத்திரு குமாரசிவ இராசேந்திரன் அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள்.
கல்லூரிச் செயலர் குமாரசிவ.இராசேந்திரன் அவர்கள் தலைமையுரை ஆற்றல்

விழாவில் கலந்து கொண்ட அறிஞர் பெருமக்கள்

ஸ்ரீசிவப்பிரகாசர் வாழ்வும் வாக்கும் எனும் பொருளில் இரு பேரரறிஞர்கள் சொற்பொழிவாற்றினர். முதலாவதாக ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி வீரசைவப் பெருமணி, சித்தாந்த வித்யாநிதி திரு.சு.மதியழகனார், அவர்கள் சிவப்பிரகாசரின் வாழ்வையும் வாக்கையும் சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.
விழாவில் கலந்து கொண்ட அறிஞர் பெருமக்கள்

அடுத்து சொற்பொழிவாற்றிய கோவை அகில இந்திய வானொலி நிலைய, நிலைய இயக்குநர் திரு.ஜெ.கமலநாதன் அவர்கள், சிவப்பிரகாசர் நமது வாழ்க்கைக்கு கற்றுக் கொடுத்திருக்கும் வாழ்வு நெறிகள் குறித்தும் சிவப்பிரகாசரின் இலக்கியங்களின் செழுமைகுறித்தும் சிறப்புற எடுத்துரைத்தார்கள்.
கோவை அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் திரு.ஜெ.கமலநாதன் அவர்கள்,
பிற்பகல் 02.00 மணியளவில் நிறைவுவிழா தொடங்கியது. மயிலம் பொம்மபுர ஆதினம், பத்தொன்பதாம் பட்டம் குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார்கள்.

சென்னைப் பல்கலைக் கழக சைவசித்தாந்தத்துறை மேனாள் தலைவர் முனைவர் வை.இரத்தினசபாபதி அவர்கள் விழாவின் அறிமுகவுரையை ஆற்றினார்கள்.
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இலட்சாராமன் அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.
கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இலட்சாராமன் அவர்கள்
கல்லூரி தமிழ்துறைப் பேராசிரியர்கள் எழுதிய பன்முக நோக்கில் சிவப்பிரகாசரின் படைப்புகள் எனும் நூலினை குருமகாசந்நிதானங்கள் வெளியிட முதல் படியினை விழுப்புரம்நகர மன்றத் தலைவர் திரு.இரா.கனகராஜ் அவர்களும். மயிலம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் திரு.மலர்மன்னன் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

பன்முக நோக்கில் சிவப்பிரகாசரின் படைப்புகள் நூல் வெளியீடு

மயிலம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் திரு.மலர்மன்னன் அவர்கள்
விழாவின் நிறைவில் குருமாகா சந்திதானங்கள் கற்பனை களஞ்சிய நம்பி விருதினை கோவை அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் சிவத்திரு.ஜெ.கமலநாதன் அவர்களுக்கு வழங்கி பெருமை படுத்தினார்கள்.
முன்னதாக, சிவப்பிரகாசர் தொடர்பான கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குருமாகாசந்நிதானங்கள் பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.
பரிசு பெறும் முதுகலை இரண்டாமியாண்டு மாணவி
பரிசு பெறும் பி.லிட். மூன்றாமியாண்டு மாணவி
விழாவின் நிறைவில் வீரசைவ முரசு ஆசிரியர் கவிஞர் ஆ.திருவாசகனார் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவில் கல்லூரி நூலகர் திரு.க.நக்கீரன், 

கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர் அ.கிருபானந்தம், முனைவர் சு.விஜயகாந்தி, முனைவர் ஏ.எழில்வசந்தன் மேலும் பல பேராசியர்களும் மணவர்களும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

தமிழரின் நம்பிக்கைகள்

சிவப்பிரகாசரும் ஏசுமத நிராகரணமும்

ரெஸலுயூசன்(Resolution)