Posts

Showing posts from November 21, 2010

ரெஸலுயூசன்(Resolution)

ரெஸலுயூசன்( Resolution) மொனிட்டர் திரையில் எழுத்துக்களும் உருவங்களும் எவ்வாறு காண்பிக்கப்பட வேண்டும் , கேமராவல் எவ்வாறு படம் பிடிக்க வேண்டும் , அதனை எவ்வாறு அச்சிட்டுக் கொள்ள வேண்டும் என்பவற்றை தீர்மாணிக்கும் காரணியாகாவே பிக்ஸல்கள் உள்ளன. படங்களைப் ப்ரிண்ட் செய்யும் போதும் மின்னஞ்சலில் இணைப்பாக அனுப்பும்போதும் பிக்ஸல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மின்னஞ்சலில் பரிமாறிக் கொள்வதாயின் குறைந்த ரெஸலுயூசனுடனும் , பெரிய அளவில் அச்சிட்டுக் கொளள வேண்டுமாயின் உயர் ரெஸலுயூஸனுடனும் டிஜிடல் கேமரா கொண்டு படங்களைப் பிடிக்க வேண்டும்.. டிஜிட்டல் கேமராவால் பிடிக்கப்படும் ஒரு படத்தின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் பிக்ஸலும் ரெஸலுயூசனும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு படத்தை உருவாக்க கேமரா எடுத்துக் கொள்ளும் பிக்ஸல்களின் எண்ணிக்கை அதிகமாயின் படத்தின் தரமும் உயர்ந்ததாயிருக்கும். எனினும் பிக்ஸல்களின் எண்ணிக்கை மட்டுமே படத்தின் தரத்தை நிர்ணயிப்பதில்லை என்பதையும் கவனத்திற் கொள்ளவும். டிஜிட்டல் கேமரா விளம்பரங்களில் மெகாபிக்ஸல் (Megapixel) எனும் வார்த்தை உபயோகிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கல