Posts

Showing posts from 2014

தமிழரின் நம்பிக்கைகள்

Image
மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள நம்பிக்கைகள் மிகப்பல . இந்த நம்பிக்கைகளே தனிமனித வாழ்வையும் ஒரு சமுதாய வாழ்வையும் நடத்திச் செல்வனவாக விளங்குகின்றன . நம்பிக்கை சொற்பொருள் விளக்கம் நம்பிக்கை வாழ்க்கையில் முதன்மை பெறுகின்றது . அதனுடைய சொல்லாட்சியைப் பற்றி அறிதலும் தேவை . இரண்டு கைகள் , கால்கள் , கண்கள் , காதுகள் , ஒரு தலை , மூக்கு , வாய் போன்றவையுடன் அறிவும் பரிவுணர்வும் பெற்றவனே மனிதன் என்கிறோம் . அதேபோன்று நம்பிக்கை என்பதற்கு , “ விசுவாசம் , ஆனை , நம்பியொப்புவிக்கப்பட்டது . உண்மை” என்றும் “சத்தியம் , நிசம் , உறுதிப்பாடு” என்றும் மதுரைத் தமிழ்ப் பேரகராதி பல்வேறு பொருள்களைத் தெரிவிக்கின்றது . நம்பு என்பதற்கு “விருப்பம் , நாவல்” எற்று , நாகை , ஆசை என்றும் , “ அருச்சகம் , நம்பென்னேவல்” என்றும் , அகராதிகள் பொருள் தருகின்றன . தொல்காப்பிய்தில் “நம்பும் மேவும் நசையாகும்மே” என்று வருகின்றது . நம்பு என்ற சொல்லிற்கு ‘நசை’ அல்லது ‘விருப்பம்’ எனும் பொருளைத் தருகின்றது . நற்றிணை 327 ஆம் பாடலில் ‘நம்புதல்’ என்ற சொல்லாட்சி நம்பிக்கை என்னும் பொருளில் வந்தள்ளது . ‘ நம்பிக்க