ரெஸலுயூசன்(Resolution)

ரெஸலுயூசன்(Resolution)

மொனிட்டர் திரையில் எழுத்துக்களும் உருவங்களும் எவ்வாறு காண்பிக்கப்பட வேண்டும், கேமராவல் எவ்வாறு படம் பிடிக்க வேண்டும், அதனை எவ்வாறு அச்சிட்டுக் கொள்ள வேண்டும் என்பவற்றை தீர்மாணிக்கும் காரணியாகாவே பிக்ஸல்கள் உள்ளன. படங்களைப் ப்ரிண்ட் செய்யும் போதும் மின்னஞ்சலில் இணைப்பாக அனுப்பும்போதும் பிக்ஸல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மின்னஞ்சலில் பரிமாறிக் கொள்வதாயின் குறைந்த ரெஸலுயூசனுடனும், பெரிய அளவில் அச்சிட்டுக் கொளள வேண்டுமாயின் உயர் ரெஸலுயூஸனுடனும் டிஜிடல் கேமரா கொண்டு படங்களைப் பிடிக்க வேண்டும்..

டிஜிட்டல் கேமராவால் பிடிக்கப்படும் ஒரு படத்தின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் பிக்ஸலும் ரெஸலுயூசனும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு படத்தை உருவாக்க கேமரா எடுத்துக் கொள்ளும் பிக்ஸல்களின் எண்ணிக்கை அதிகமாயின் படத்தின் தரமும் உயர்ந்ததாயிருக்கும். எனினும் பிக்ஸல்களின் எண்ணிக்கை மட்டுமே படத்தின் தரத்தை நிர்ணயிப்பதில்லை என்பதையும் கவனத்திற் கொள்ளவும்.

டிஜிட்டல் கேமரா விளம்பரங்களில் மெகாபிக்ஸல் (Megapixel) எனும் வார்த்தை உபயோகிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஒரு மெகா பிக்ஸல் என்பது ஒரு மில்லியன் பிக்ஸல்களுக்குச சமமானது. மெகா பிக்ஸலின் அளவு அதிகமாக இருக்குமிடத்து படத்தின் தெளிவு அதிகமாக இருப்பதுடன் கேமராவின் விலையும்கூட சற்று அதிகமாகாவே இருக்கும். தற்போது பல்வேறு மெகாபிக்ஸ்ல் அளவுகளில் டிஜிட்டல் கேமராக்கள் கிடைக்கின்றன. பெரிய அளவில் படங்களைப் ப்ரிண்ட் செய்து கொள்ள வேண்டுமானால் குறைந்தது 2 மெகா பிக்ஸல் கொண்ட கேமராவைப் பயன் படுத்த வேண்டும். சாதாரண பிலிம் கேமரா தரத்தில் படம் பிடிக்க வேண்டுமாயின் மூன்றிற்கு மேற்பட்ட மெகா பிக்ஸல் கொண்ட கேமராவைப் பயன் படுத்த வேண்டும்.
டிஜிட்டல் கேமரா மற்றும் ப்ரிண்டர்களின் தெளிவுத் திறனை dots per inch (dpi) எனும் அலகிலும் வெளிப்படுத்தப்படுகிறது. இங்கு dpi என்பது ஒரு சதுர அங்குலத்தில் உருவாக்கக் கூடிய பிக்ஸல்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. 640 x 480 dpi அளவு கொணட ஒரு கேமரா ஒரு சதுர அங்குளத்தில் கிடையாக் 640 பிக்ஸல்களையும் நிலைக்குத்தாக 480 பிக்ஸல்களையும் தோற்றுவிக்கும். மொத்தமாக ஒரு சதுர அங்குலத்தில் 307,200 பிக்ஸல்களைத் தோற்றுவிக்கும்.
தற்போது பாவனையிலுள்ள கேமராக்களில் ரெஸலுயூசன் அளவை மாற்றி அமைக்கும் வசதியுமுள்ளது. குறைந்த ரெசலுயூசனில் அதிக எண்ணிக்கையில் படங்களைப் பிடித்து கேமராவிலுள்ள மெமரி கார்டில் சேமிக்கலாம். மாறாக அதிக ரெஸலுயூசன் கொண்ட படங்கள் மெமரி கார்டில் அதிக இடத்தைப் பிடித்துக் கொள்ளும்.
ஒவ்வொரு பிக்ஸலையும் உருவாக்க எடுத்துக் கொள்ளும் (bit) பிட்டுகளின் எண்ணிக்கையும் கேமராவின் திறனை வெளிப்படுத்தும்.  கறுப்பு வெள்ளைப் படங்களை விட பல வர்ணங்களில் பிடிக்கப்படும் படங்கள் ஒரு பிக்ஸலை உருவாக்க் எடுத்துக் கொள்ளும் பிட்டுகளின் எண்ணிகை அதிகமாயிருக்கும். உயர் தரத்திலான் படங்களைப் பிடிக்கும் கேமராக்கள் குறந்தது 24 பிட் கொண்டதாயிருத்தல் வேண்டும்.

உயர் தரத்தில் படங்களை அச்சிட்டுக் கொள்ள ஒரு அங்குளத்தில் குறைந் தது 200 பிக்ஸல்களைக் கொண்டிருத்தல் வேண்டும். அதாவது 5 x 7 அங்குள அளவில் ஒரு படத்தைப் ப்ரிண்ட் செய்து கொள்ள வேண்டுமயின் 1,000 x 1,400 பிக்ஸல்களும் 8 x 10 அங்குள அளவில் அசிட்டுக் கொள்ள 1,600 x 2000 பிக்ஸல்களும் கொண்டிருத்தல் வேண்டும்.வெவ்வேறு அளவிலான ரெசலுயூசன், மொனிட்டர் திரையில் படங்களை வெவ்வெறு அளவுகளில் காண்பிக்கும்.

விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் ரெஸலுயூசனை மாற்றப் பின் வரும் வழி முறையைக் கையாளுங்கள்,.
Display Properties
டயலொக் பொக்ஸைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு Settings செட்டிங்ஸ் டேபில் க்ளிக் செய்யுங்கள். Screen Resolution பகுதியில் நகர்த்தக் கூடிய ஒரு அம்புக்குறியைக் காணலாம், அதனை மவுஸ் மூலம் இடப்பக்கமாக நகர்த்தி (Less) குறைந்த ரெஸலுயூசன் (800 x 600) அளவில் வைத்து Apply பட்டனில் க்ளிக் செய்யுங்கள. இப்போது திரையில் படத்தின் அளவை அவதானியுங்கள்.அதேபோல் அம்புக் குறியை வ்லப்புறம் நகர்த்தி (More) அதிக ரெசலுயூசனில் வைத்து Apply க்ளிக் செய்யுங்கள். இப்போது படத்தின் அளவு சிறிதாயிருப்பதைக் காணலாம்.
விண்டோஸில் ரெஸலுயூசனை விருப்பம்போல் மாற்றியமைக்கும் வசதியிருப்பதால் உங்கள் தேவைக்கேற்ற ரெஸலுயூசன் அளவு என்ன என்பதைத் தீர்மாணித்துக் கொள்ளலாம். ரெஸலுயூசனின் அளவைக் குறைக்கும்போது மொனிட்டர் திரையில் படங்கள் பெரிதாகத் தோன்றும். அப்போது இணைய பக்கங்கள் ம்ற்றும் வேறு ஆவனங்கள் கணினித் திரையின் அளவுகேற்ப தோன்றாது. ஒரு பக்கத்தைப் முழுமையாகப் பார்வையிட மேலும் கீழும் இடமும் வலமும ஸ்க்ரோல் செய்ய வேண்டி வரலாம். அதேபோல் ரெசலுயூசன் அளவை அதிகரிப்பதன் மூலம் படங்களின் அளவு சிறிதாகாத் தோன்றுவதுடன் தெளிவும் அதிகரிக்கும்.

ரெஸலுயூசன் மற்றும் பிக்சல் பற்றித் தெளிவாக அறிந்திருத்தல் உங்கள் கணினிக்கேற்ற ஒரு வன் பொருள் சாதனத்தை அதாவது வீடியோ கர்ட், மொனிட்டர், வெப்கேம், ஸ்கேனர், டிஜிட்டல் கேமரா போன்றவற்றைத் தெரிவு செய்திடவும் உதவியாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

தமிழரின் நம்பிக்கைகள்

சிவப்பிரகாசரும் ஏசுமத நிராகரணமும்