வருடுபொறியின் வகைகள் (Classification of Scanners)

கடந்த சில வருடங்களாக இல்லங்களிலும், அலுவலகங்களிலும் வருடுபொறிகளின் (Scanner) பங்கு மிகவும் அத்தியாவசியமாகி விட்டது. வருடுபொறிகளின் தொழில்நுட்பம் எல்லா இடங்களிலும், பல வழிகளில் உபயோகப்படுத்தப்படுகின்றது.

வருடுபொறியின் வகைகள்:

(I) தட்டுப்படுகை வருடுபொறி (Flat bed Scanners)
(II) தாள்செலுத்தி வருடுபொறி (Sheet bed Scanners)
(III) உருளை வருடுபொறி (drum Scanner)
(IV) கையடக்க வருடுபொறி (hand held Scanner)

(I) தட்டுப்படுகை வருடுபொறி
கணிப்பொறி வருடிகள் என்றழைக்கப்படும் தட்டுப் படுகை வருடுபொறிகள் மிகவும் திறன் மிக்க பொதுவாக எல்லோராலும் பயன்படுத்தக்கூடிய ஒரு வருடுபொறியாகும்.
அந்தத் தட்டப்படுகை வருடுபொறியினுள் நாம் படத்தையோ அல்லது பிற ஆவணங்களையோ உட்செலுத்தி அதே அளவில் நாம் பதிவு செய்து கொள்ளலாம். இதன் இயக்கமுறை கிட்டதட்ட நகல்பொறியின் (Xerox Machine) இயக்கத்தை ஒத்ததாகும்

(II) தாள்செலுத்தி வருடுபொறி
தாள் செலுத்தி வருடுபொறி, தோற்றத்திலும் அமைப்பிலும் தட்டுப்படுகை வருடுபொறிகளை ஒத்ததாக இருப்பினும், இயங்கும் விதத்தில் மாறுபட்டு இருக்கினறது. இவ்வருடுபொறியினுள் செலுத்தக்கூடிய தாளானாது, தாள் நகருமே ஒழிய, scan head அதே இடத்தில் தான் இருக்கும் இவ்வருடுபொறி தோற்றத்தில் சிறிய கையாளத்தகு அச்சுப்பொறி (Portable Printer) போல அமைந்திருக்கின்றது.

(III )உருளை வருடுபொறி
உருளை வருடுபொறிகள், மிகத் தெளிவான விரிவான படங்களைப் பதிவு செய்ய, பதிப்பீட்டு நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன, அந்நிறுவனங்கள் Photo Multiplier Tube என்னும் தொழில் நுட்பத்தைக் கையாள்கிறார்கள். இந்த Photo Multiplier Tube தொழில் நுட்பத்தில், பதிவு செய்ய வேண்டிய ஆவணங்களை, ஒரு கண்ணாடி உருளையில் ஏற்றுகிறார்கள் அந்த உருளையின் நடுவில் இருக்கும் உணரி (sensor) ஆனது அந்த ஆவணத்திலிருந்து வெளிப்படும் ஒளியை & ஒளிக்கதிர்களாக பிரிக்கின்றது. இப்படிப் பிரிக்கப்படும் ஒளிக்கதிர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிற வடிகட்டியின் மூலம் PMDயினுள் செலுத்தப்பட்டு மின்குறிகை (Electrical signal)களாக மாற்றப்படுகின்றது.
வருடுபொறிகளின் அடிப்படை செயல்பாடு என்னவென்றால் படங்களை நன்கு ஆராய்ந்து, பின்பு அதனை பல வழிகளில் செயல்முறைப் படுத்துவதாகும். படங்கள் மற்றும் எழுத்துப் பதிவு (OCR) அதாவது ஒளியியல் எழுத்தேற்பு என்பன, பதிவு செய்த தகவல்களை கோப்புகளில் சேமித்து வைக்க உதவுகின்றன.

(IV) கையடக்க வருடுபொறி
கையடக்க வருடுபொறியானது, தட்டைப்படுகை வருடுபொறியின் அடிப்படை தொழில்நுட்பத்தில் அமைந்கதாக உள்ளது. இருப்பினும் அவ்வருடுபொறி பயன்படுத்துபவரைச் சார்ந்ததாக அமைந்து உள்ளது. இவ்வருடுபொறியை எழுத்துக்களின் மீதோ அல்லது படங்களின் மீதோ நகர்த்தி பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் பதிவு செய்யக்கூடிய நகலின் தோற்றம் நல்ல தரமுடையதாக இருக்காது. எழுத்துக்களை விரைவாகப் பதிவு செய்வதற்கு இவ்வருடுபொறி மிகவும் பயன்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழரின் நம்பிக்கைகள்

சிவப்பிரகாசரும் ஏசுமத நிராகரணமும்

ரெஸலுயூசன்(Resolution)