ஆசிரியர் தின வாழ்த்து

மதிப்புமிகு முதல்வர்அவர்களே
அன்புமிகு ஆசிரியர்களே
இனிய நண்பர்களே
அனைவருக்கும் வணக்கம்.

இந்தக் கவிதைகள்
ஆசிரியர்களை வாழ்த்திப்பேசி
வசியப் படுத்துவதற் கல்ல.....
அல்லது

இன்று ஆசிரியர் தினம்என்பதால்
சடங்கு முறைக்காகத்தொடுக்கப்பட்ட
சர்க்கரைச் சரமும்அல்ல......மாறாக,

அன்றையகுருகுலம் தொடங்கி
இன்றைய கல்விப் புலம் வரை
காலம் கடந்து
கலங்கரை விளக்காய் ஒளி காட்டும்,
வழிகாட்டும்
ஆசிரிய விழிகளுக்கு
எங்களின்அன்புப் பாமாலை
இன்பத் தமிழ் மாலை......

வெற்றிக்கு வ(வி)ழிகாட்டிகள்
மாதா, பிதா, குரு, தெய்வம்
என்றார்கள் சான்றோர்கள்
ஆலோசித்தோம்
எங்களுக்கு உடன்பாடில்லை

மாதா, பிதாவாக இருக்கும்குருவே
எங்கள் தெய்வமெனத்
தீர்மானம் நிறைவேற்றி
உச்ச நீதி மன்றத்திற்கு
மனுச் செய்துள்ளோம்.....

இந்த ஏணிப்படிகள்
எத்துணைப் பேரைஉயர வைத்திருக்கும்
அப்பப்பா....அண்ணார்ந்து பார்த்தோம்
மெய்ச் சிலிர்ப்பில்
மனம் மகிழ்ந்தோம்.....

கல்லைப்பட்டைத் தீட்டத் தீட்ட
வைரம் விளையுமாம்.
அதில் என்ன வியப்பு....
எங்கள் ஆசிரியர்கள்
கூழாங் கற்களையல்லவா
வைர மாக்கியுள்ளார்கள்....

ஏகலைவன்
கட்டைவிரலைத்
தட்சணையாகக் கொடுத்தானாம்
கேள்விப்பட்டோம் புராணக் கதைகளில்
ஏகலைவன் போல்

நாங்கள் ஒன்றும்
சுயநலவாதிக ளல்லர்
கேட்ட உடனே கொடுப்பதற்கு

கேட்காமலேயே கொடுப்போம்
எங்களின் உயிரையும்....

அன்புள்ள ஆசிரியர்களே
இந்தக் கூற்றுகள்
உங்கள் மீது பொழியப்பட்ட
ஐஸ் மழையல்ல...
எம்மீது பொழிந்தஅன்பு மழையில்
விளைந்தமுத்து மழை
நம் உறவைப் பலப்படுத்தும்
டங்ஸ்டன் இழை....

இந்தக் கல்லூரி வேண்டுமானால்
ஐந்து ஆண்டுகளை
அரை நெடிப் பொழுதில்கடந்திருக்கலாம்.

அன்பிற் கினிய ஆசிரியர்களே
கல்வி உறவு
ஆயிரம் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும்.

Comments

Popular posts from this blog

தமிழரின் நம்பிக்கைகள்

சிவப்பிரகாசரும் ஏசுமத நிராகரணமும்

ரெஸலுயூசன்(Resolution)