போக்குவரத்து

சாலை நடுவே இயங்கும்
வெள்ளை சமிக்கைகள்
வாகன ஓட்டிக்கு
வழி கொடுக்கும்
துவார பாலர்கள்.

ஆக்ஸிஜன் தொலைத்த
அவசர உலகத்தில்
கரியமில வாயுவை உட்கொள்ளும்
அதிசய ஜீவன்கள்

பாவம்
நெட்டை மரங்களென
நின்று புலம்பும்
வெள்ளை வைரங்கள்

வெள்ளாடை எதற்கென
வெகுநாள் யோசித்தேன்
விளங்க வில்லை!

விபரம் புரிந்தது
மேலாடை கொள்ளும் மாசு
இதயத்துள் படிவதைக்
கணக்கெடுக்க
கவர்மெண்ட் கொடுத்த
குறிப்பாடை அது.

சூரியக் கதிர்களோடு நீர்
தோழமை கொள்ளலாம்.
மழையோடு நீவீர்
மகிழ்ந் துறவாடலாம்.
மனதாரச் சொல்கிறேன்

நெஞ்சில் தோன்றும் துக்கம்
என் கருவிழிப் பாதையி லல்லவா
கசிகிறது.

Comments

Popular posts from this blog

தமிழரின் நம்பிக்கைகள்

சிவப்பிரகாசரும் ஏசுமத நிராகரணமும்

ரெஸலுயூசன்(Resolution)