சிவப்பிரகாசரும் ஏசுமத நிராகரணமும்
சிவப்பிரகாசர் என்பவர் "கற்பனைக் களஞ்சியம்" என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். சிற்றிலக்கியப் புலவர். இவர் , " கவி சார்வ பெளமா" , " நன்னெறி சிவப்பிரகாசர்" , " துறைமங்கலம்" சிவப்பிரகாசர் என்று பலவாறாக அழைக்கப்பட்டார். தமிழகத்தில் சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான சம்பந்தர் , அப்பர் , சுந்தரர் , மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் "நால்வர் நான்மணி மாலை" என்ற கவிதை நூலை இவர் எழுதினார். வாழ்க்கைச் சுருக்கம் தொண்டை நாட்டின் காஞ்சிபுரத்தில் வேளாளர்களின் ஞானகுருவாக விளங்கியவர் குமாரசாமி தேசிகர். இவருக்கு சிவப்பிரகாசர் , வேலையர் , கருணைப்பிரகாசர் , ஞானாம்பிகை எனும் பெயரில் நான்கு பிள்ளைகள். மக்களின் கல்விப்பருவத்திலேயே , குமாரசாமி தேசிகர் இறையடி சேர்ந்தார். பின்னர் , மூத்தவர் சிவப்பிரகாசர் தம் தம்பியரொடு திருவண்ணாமலை சென்று , அங்கு தெற்கு வீதியிலுள்ள திருமடத்தில் எழுந்தருளியிருந்த குருதேவரைக் கண்டு வணங்கி அங்கேயே இருந்துகொண்டு தாம் கற்கவேண்டிய நூல்களைக்கற்று வந்தார். ஆங்கோர்நாள் , திருவண்ணாமலையை